தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மக்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்டவரே நடிகர் யோகிபாபு.தனது டைம்மிங் காமெடியால் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கவர்ந்து இழுப்பவர். இவரின் நகைச்சுவை நடிப்பை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
தமிழ் சினிமாவில் 2009ம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு ரஜினி, அஜித், விஜய், ஜெயம் ரவி எனப்பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல், சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் இவரே நடித்து வருகின்றார்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன்னுடைய மனைவி, குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க அவர் மறந்து இல்லை. சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தைக்கு தந்தையான யோகி பாபு, சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவ்வாறுஇருக்கையில் திடீர் என நடிகர் விஜயகாந்த் அவர்களை சந்தித்த போது எடுத்த வீடியோ ஒன்றை யோகி பாபு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வீடியோவில், விஜயகாந்த் முன்பு மிகவும் பவ்வியமாக யோகிபாபு நிற்கின்றார். இதை பார்த்தாலே அவருக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது. மேலும் பின்னணியில் விஜயகாந்த நடித்த 'சின்னக்கவுண்டர்' படத்தில் வரும் வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்கிற பாடல் ஒலிக்கிறது. தற்போது உடல்நல பிரச்சனை காரணமாக வீட்டில் முழு ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த் மீண்டும் பழைய கேப்டனாக உடல்நலம் தேறி வெளியே வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
அத்டதோடு விசேஷ நாட்களிலும், பிறந்தநாள் போன்ற நன்னாளில் மட்டுமே ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வரும், விஜயகாந்தை யோகி பாபு தற்போது சந்தித்துள்ள வீடியோவை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருவதோடு, வைரலாக்கி வருகிறார்கள்.
— Yogi Babu (@iYogiBabu) November 2, 2022
Listen News!