உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களால் கடந்த இரு ஆண்டுகளாக சரிவர கொண்டாடப்படாமல் இருந்த இந்த பண்டிகை இந்த ஆண்டு பலராலும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் வீட்டில் விநாயகர் சிலை வாங்கி வைத்து வழிப்பட்டு அதனை தரிசித்துக் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி பல கோவிகளில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் விக்ரமின் 'கோப்ரா' மற்றும் பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இதனால் திரையரங்குகளிலும் சனக்கூட்டம் நிரம்பி வழிகின்றது.
அத்தோடு ஏராளமான திரையுலக பிரபலங்களும் இன்று விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி அவர்கள் சமூக வலைதளங்களில் பல பதிவுகளையும் இட்டுள்ளனர். அந்த வகையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, நீண்ட பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
அன்றொரு விநாயகர் சதுர்த்தியன்று நான்”start camera”சொல்ல,இன்றுவரை Single shot ஆக நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது!Non linear-ஆக புற வெற்றிகள் முன் பின் வந்து போன வண்ணம் இருக்க,மனம் என்னவோ எண்ணியதை(உலகின் முதல் முயற்சி-இரவின் நிழல்)செய்து அதற்கு இளைஞர்களிடம் கிடைத்த வரவேற்பு continue pic.twitter.com/OiXMcccjQd
அதில் அவர் “அன்றொரு விநாயகர் சதுர்த்தியன்று நான் start camera என்று சொல்ல, இன்றுவரை Single shot ஆக நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது! Non linear-ஆக புற வெற்றிகள் முன் பின் வந்து போன வண்ணம் இருக்க, மனம் என்னவோ எண்ணியதை செய்து அதற்கு இளைஞர்களிடம் கிடைத்த வரவேற்பு, விருதுகள் என மகிழ்ந்தே நிறைகிறது.
குடைக்குள் விநாயகரை சுமந்து வந்ததும், மூன்றாம் நாள் கடலில் கரைக்க மனமழுத இளம் பருவம் கண்முன்னே கரையாமல்,கரையாத பிள்ளையாரை செதுக்கி தந்துவிட்டு சென்ற சிற்பி திரு பாஸ்கருக்கு நன்றி கொண்டாடுபவர்கள் மகிழ்ச்சியில் திண்டாட வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இதுதவிர ஏனைய நடிகர், நடிகைகளான சாக்ஷி அகர்வால், கீர்த்தி சுரேஷ், பிரணிதா சுபாஷ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், ஆண்ட்ரியா, ஹரிஷ் கல்யாண், மகத் ராகவேந்திரா ஆகியோரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அப்பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.
Yes he is Home😍 Happy Vinayagar Chathurthi to one & all. To many auspicious beginnings ❤️🙏. #VinayagarChaturthi pic.twitter.com/v0Axwdk7z5
New beginnings ✨ Happyyyyyyy #VinayagarChathurthi #GaneshChaturthi god bless us all..!!! pic.twitter.com/2inPzHF90n
May all the new journeys you take on this auspicious day become successful 😊
Happy Vinayagar Chaturthi ❤️ pic.twitter.com/oSVuAow9sG
Listen News!