• Sep 20 2024

நயன்தாராவின் தோழிகளுக்கு நடுவே நிற்கும் விக்னேஷ் சிவன்- இந்தப் புகைப்படம் சூப்பர் கியூட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதல் ஜோடியாக இருந்து கடந்த மாதம் 9ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த கொண்டவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.இவர்கள் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதிக்கு சென்றிருந்தனர்.

இது தவிர நயன்தாரா தனது தயார் வீட்டுக்கு விருந்துக்கும் சென்றிருந்தனர்.திருமணம் முடிந்து ஒரு மாத காலம் முடிந்ததை அடுத்து விக்னேஷ் சிவன் அடிக்கடி தங்களுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருகான், அட்லீ, ஆகியோர் பரிசுகளுடன் வந்து தன்னை வாழ்த்திய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் நயன் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து எவர் கிரீன் ஸ்டார் கஃப்பில் சூர்யா - ஜோதிகா மேட்சிங் மேட்சிங் உடையில் வந்து வாழ்த்திய புகைப்படத்தையும், நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மனைவி ஜெசியுடன் வந்து வாழ்த்திய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இதை தொடர்ந்து அனிருத், மற்றும் தன்னுடைய நண்பர்கள் வந்து வாழ்த்திய புகைப்படத்தை வெளியிட்ட இந்த ஜோடி தற்போது நயன் தோழிகள் வந்து வாழ்த்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

நயன்தாராவின் 6 தோழிகளுக்கு நடுவே விக்கி தன்னுடைய காதல் மனைவியுடன் போஸ் கொடுத்த போது புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement