நயன்தாராவின் கணவனும், பிரபல இயக்குநராகவும் இருப்பவர் விக்னேஷ் சிவன். அஜித் குமாரை வைத்து கட்டாயம் ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது இவரின் பல நாள் கனவாக இருந்து வந்தது. அந்த கனவு நினைவாகி விட்டது என்ற சந்தோஷத்தில் சமீபகாலமாக இருந்தார். ஆம் அது வேறெதுவுமில்லை, ஏ.கே. 62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் தற்போது இயக்குநரை மாற்றிவிட்டார்கள்
அதாவது ஏ.கே. 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய ஸ்க்ரிப்ட் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி அதை மாற்றச் சொன்னாராம் அஜித் குமார். ஆனால் முழு ஸ்க்ரிப்ட்டையும் அஜித்திடம் கொடுப்பதில் விக்னேஷ் சிவன் கால தாமதம் செய்தாராம். இதனைத் தொடர்ந்து இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து அவரை உடனே மாற்றிவிட்டார்கள்.
தனக்கு ஏ.கே. 62 பட வாய்ப்பு கிடைத்த நாளிலிருந்து ட்விட்டரில் அஜித் குமாரின் புகைப்படத்தைத் தான் தன்னுடைய கவர் பிக்சராக வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். மேலும் கடந்த சில நாட்களாக ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்று பேச்சு எழுந்தபோது கூட அந்த புகைப்படம் அப்படியே இருந்தது.
இந்நிலையில் தற்போது கவர் பிக்சரை விக்னேஷ் சிவன் மாற்றிவிட்டார். அதாவது அஜித் புகைப்படத்தை நீக்கிவிட்டு ஊக்கமளிக்கும் வாசகம் ஒன்றினை வைத்திருக்கிறார். அது வேறெதுவுமில்லை, நெவர் கிவ் அப் என்கிற வாசகத்தைத் தான் தன்னுடைய கவர் பிக்சராக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இதனை அவதானித்த ரசிகர்கள் இதனுடன் இணைத்து வேறொரு கருத்தினையும் கூறி வருகின்றனர். அதாவது "இந்த வாசகம் அஜித் குமார் சொன்னதாச்சே. அஜித் கைவிட்டாலும் அவர் சொன்னதை விக்னேஷ் சிவன் மறக்கவில்லை" எனக் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது "நம்பிக்கையுடன் இருங்கள் அன்பான இயக்குநரே, அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பு நிச்சயம் உங்களை தேடி வரும். அதுவரை நம்பிக்கையை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்" எனவும் பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Listen News!