• Nov 17 2024

விக்னேஷ் சிவன் போட்ட பக்கா ஸ்கெட்ச்..ஸ்ரீதேவி மகளை தட்டித் தூக்கிய கமல்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் படம் மூலம் கோலிவுட்டில் கவனம் ஈர்த்தார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனையடுத்து நவரசா ஆந்தாலஜியில் குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் பெரிதாக போகவில்லை. .

ஒரு படத்திலிருந்து இயக்குநர் வெளியேற்றப்பட்டால் அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே உடனடியாக அடுத்த ஹீரோவை வைத்து படம் இயக்குவதற்கு விரும்புவார்கள். அந்தவகையில் விக்னேஷ் சிவன் அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் லவ் டுடே படத்தின் மூலம் சென்சேஷனல் ஆன இயக்குநரும், நடிகருமான ப்ரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.

இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்னேஷ் சிவன் - ப்ரதீப் ரங்கநாதன் இணையும் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். கமலுக்கே ஒரு கதை பிடித்துவிட்டது என்றால் நிச்சயம் அந்தக் கதை சோடை போகாது. எனவே விக்னேஷ் சிவன் இந்தப் படத்தின் வெற்றி மூலம் கம்பேக் கொடுத்து தன்னை வெளியேற்றியவர்களுக்கு பதிலடி கொடுப்பார் என ரசிகர்களில் சிலர் கூறிவருகின்றனர்.

 இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலும் நயன்தாராதான் இப்படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் இப்போது வேறு ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement