கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அதே போன்ற ஒரு நிலை தான் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்க நாதனை வைத்து இயக்கி வரும் ’எல்ஐசி’ படத்துக்கு நேரும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகிய ’ஜப்பான்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ரவிவர்மன் இயக்குனருக்கு பெரும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தான் அந்த படத்தின் பல காட்சிகள் கடைசி நேரத்தில் திடீரென மாற்றப்பட்டதாகவும் இதன் காரணமாக தான் ’ஜப்பான்’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ’எல்ஐ’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் விக்னேஷ் சிவனுக்கும் பெரும் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. சமீபத்தில் நடந்த வெளிநாட்டு படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன் மற்றும் ரவிவர்மன் ஆகிய இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் விக்னேஷ் சிவனுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை ரவிவர்மன் கொடுத்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் இருவருக்கும் ஒத்துப்போகாத நிலையில் இதே ரீதியில் சென்றால் ’ஜப்பான்’ படத்தின் நிலைதான் ’எல்ஐசி’ படத்திற்கும் ஏற்படும் என்று படக்குழுவினர் அச்சத்தில் உள்ளனர் இதனையடுத்து இருவரையும் சமாதானப்படுத்த பேச்சுவார்த்தை நடந்து போயிட்டு வருவதாகவும், ரவிவர்மன் அவருடைய ஒளிப்பதிவாளர் வேலையை மட்டும் பார்த்தால் போதும், இயக்குநர் மற்றவற்றை பார்த்துக் கொள்வார் என்று ரவிவர்மனுக்கு அறிவுரை கூறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இருப்பினும் ரவிவர்மன் சமாதானம் அடைந்த மாதிரி தெரியவில்லை என்பதால் படப்பிடிப்பில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
Listen News!