• Sep 20 2024

நயனை விட 'அவர்' மீது விக்னேஷ் சிவனுக்கு அதிக லவ் -பரபரக்கும் சோஷியல் மீடியா

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

இந்நிலையில் அவர் நயன்தாராவுக்கு பதில் அஜித் குமாரின் புகைப்படங்களை வெளியிடுகிறார். கார்கில் நினைவிடத்திற்கு அஜித் சென்றபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.இதையடுத்து அஜித் தன் ரைடிங் கியரில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தையும், மேலும் தன் பைக்குடன் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.


அதை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, எத்தனை ஹார்ட்டின். இதை நயன்தாரா பார்த்தால் உனக்கு என்ன பிடிக்குமா இல்லை அஜித் குமாரை பிடிக்குமானு கேட்கப் போறாங்க. தல மீது உங்களுக்கு இவ்வளவு பாசம்னு தெரியாமல் போச்சு அன்பான இயக்குநரே என தெரிவித்துள்ளார்.

கெரியரை பொறுத்தவரை அஜித் குமாரை வைத்து ஏ.கே. 62 படத்தை இயக்க தயாராகி வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தன் காதல் மனைவியான நயன்தாராவை நடிக்க வைக்கிறார். தனக்கு பிடித்த நடிகருக்கு ஜோடியாக, தனக்கு ராசியான நடிகையை நடிக்க வைக்கிறார்.திருமணத்திற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஹீரோயினும் நயன்தாரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement