• Sep 21 2024

இந்து முறைப்படியா ? கிறிஸ்துவ முறைப்படியா ?...பத்திரிகையாளரை சந்தித்து அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடியாக விளங்குபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் என்னும் திரைப்படத்தின் மூலம் நண்பர்களாக அறிமுகமாகி பின்பு காதலிக்க ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இந்த மாதம் 9ம் திகதி திருமணத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர மேலும் தங்களது திருமணத்திற்காக சில முக்கியமான நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வைத்துள்ளனர்.

மேலும் இதற்காக இருவரும் திருச்சியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தார்கள். அத்தோடு நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. பலரும் எதிர்பார்த்தது போல திருப்பதியில் தான் இவர்கள் திருமணம் நடத்துவதாக முடிவு செய்திருந்தார்கள். ஆனால், 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்கு திருப்பதி நிர்வாகத்தில் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் திருமணம் நடத்த வேண்டாமென்று இருவருமே இணைந்து முடிவெடுத்து இருக்கின்றன. ஆகவே, இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக நடக்க இருக்கிறது. இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் மிக பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படி ஒரு நிலையில் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக பிரெஸ் மீட் ஒன்றை வைத்து அறிவித்து இருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் அதில் பேசிய அவர் ‘வருகிற ஜூன் 9ல் எங்களது திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது. திருப்பதியில் தான் செய்ய நினைத்தோம். ஆனால் நிறையபேரை அழைத்து சென்று அங்கு நடத்த முடியாத சூழலால் சென்னையில் நடத்துகிறோம். ஜூன் 11ல் தம்பதியராய் பத்திரிக்கையாளர்களாகிய உங்களை சந்திக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement