• Sep 20 2024

விக்னேஷ் சிவன் படத்தை வைத்து மோசடி… வசமாக சிக்கிய தியேட்டர்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ்லேயும் வசூலையும் குவித்தது.

மேலும் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் விநியோகஸ்தர் பல்வேறு திரையரங்குகளில் படத்தின் வசூலை ஆய்வு செய்ததில், திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ டிக்கெட்டுகள் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக பொய்யாக கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, படத்தின் டிக்கெட் கணக்கை தவறாக சித்தரித்ததற்காக திருச்சியிலுள்ள தியேட்டருக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தின் பல பகுதிகளிலுள்ள திரையரங்குகளில் படங்களுக்கான டிக்கெட் கணக்கை தவறாக காட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற சம்வங்கள் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' மற்றும் அஜித்தின் 'வலிமை' ஆகிய படங்களின் ரிலீஸின் போதும் நடந்துள்ளதாக தெரிகின்றது. இந்த போலி கணக்கால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. எனவே, அனைத்து திரையரங்குகளிலும் கம்ப்யூட்டர் டிக்கெட் வழங்கும் முறையை இணைத்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியுமென தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

எனினும் , இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, அனைத்து திரையரங்குகளையும் கணினி மூலம் இணைக்க வேண்டுமென்றும், இதனால் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்குமென்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும், படத்தின் மொத்த வசூல் ரூ 65 கோடி என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement