துணிவு படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் லைகா AK62வில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
மேலும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்டது. அதே போல Ak62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியானது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே சோகமான பதிவுகளை தனது சமுக வலைத்தகத்தில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட விக்கி 6 பணிகளை முழு மனதுடன் விரைவில் தொடருவேன். இந்த கடினமான காலங்களில் நான் சந்தித்த கடவுளுக்கும் அனைத்து அன்பான மக்களுக்கும் நன்றி. உங்கள் அரவணைப்பு மற்றும் என் மீதான நம்பிக்கை என்னைக் கண்டறிய உதவியது.
இந்த கணிக்க முடியாத, நிச்சயமற்ற சூழலில் உயிர்வாழ எனக்கு நம்பிக்கையையும் அளித்தது.இன்று, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனது எதிர்காலத்தை எதிர்நோக்குகிறேன்.எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் எதிர்நோக்குகிறேன்.எனது சில இனிமையான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவன் Ak62 குறித்து பேசி இருக்கிறார்.அதில் பேசிய அவர் ‘அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை தயாரிப்பாளருக்கு படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் கதை திருப்திகரமாக இல்லை. எனக்கு கிடைத்த கதை தற்போது மகிழ்திருமேனி சாருக்கு கிடைத்திருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. ஒரு ரசிகனாக வந்த படத்தை நான் கொண்டாடுவேன்’ என்று கூறியுள்ளார்.
Listen News!