• Nov 19 2024

முதல் பத்திரிகை இந்த தொகுப்பாளருக்கு தானா… திருமணம் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி தற்போது 7 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இதனை நயன்தாராவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் பலரும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

திருப்பதியில் நடைபெறும் அவர்கள் திருமணத்தில் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளப்போகிறார்கள் என தெரிகிறது.

இருப்பினும் அவர்கள் இதுவரை திருமண தேதியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் சமீபத்தில் ஒரு விருது கலந்துகொண்டிருக்கின்றனர்.

எனினும் அப்போது மேடையில் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர் பிரியங்கா. அதை சரியான நேரத்தில் அறிவிப்பேன் என கூறி இருக்கிறார்.

என்னை அழைப்பீர்களா என பிரியங்கா கேட்க, 'முதல் பத்திரிகை உங்களுக்கு தான்' என கூறி இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement