லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தில் பாடல்கள் எழுதுவதை பற்றி பேசினார் விக்னேஷ் சிவன். இதுவரை எனக்கு லியோ படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு வரவில்லை என கூறியுள்ளார்
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. தன் முந்தைய படமான விக்ரம் மூலம் மிரட்டலான வசூல் சாதனையை நிகழ்த்தி காட்டினார் லோகேஷ். அதன் பின்னர் இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்தனர்.
இந்த சமயத்தில் தான் லோகேஷ் மாஸ்டர் படத்திற்க்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். எனினும் இதன் காரணமாகவே லியோ படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
எனினும் இதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும், அதன் பிறகு விறுவிறுப்பாக போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்டு படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி திரையில் வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் லியோ படத்தில் பாடல்கள் எழுதுவீர்களா என கேள்வி கேட்டப்பட்டது. எனினும் அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், இதுவரை லியோ படத்திலிருந்து என்னை யாரும் பாடல் எழுத அழைக்கவில்லை, ஒருவேளை அழைத்தாள் கண்டிப்பாக எழுதுவேன் என தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். அத்தோடு அந்த கண்ண பாத்தாக்கா மற்றும் குய்ட் பண்ணுடா என மாஸ்டர் படத்தில் இரண்டு ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். எனவே இவர்கள் மீண்டும் இணையும் படமான லியோவிலும் விக்னேஷ் சிவன் பாடல்கள் எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இவரிடம் இந்த கேள்வியை கேட்டனர்.
ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு வரவில்லை என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இவ்வாறுஇக்கையில் விக்னேஷ் சிவன் தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.
மேலும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இதைப்பற்றி பேசிய விக்னேஷ் சிவன் தற்போது தான் கதை விவாதம் போய்க்கொண்டிருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!