• Sep 21 2024

நானும் ரௌடி தான் படத்தில் ஹீரோவாக நடிக்க இந்த நடிகரை தான் விக்னேஷ் சிவன் முதலில் அணுகினாராம்- வட போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இளம் இயக்குநராக வலம் வருபவர் தான் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் வெளி வந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் நானும் ரௌடி தான். இப்படத்தில் கதாநாயகனாக விஜய்சேதுபதியும் கதாநாயகியாக நயன்தாராவும் நடித்திருந்தனர்.

இவர்களுடன் ஆர்.ஜே. பாலாஜி, மன்சூர் அலிகான், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காமெடி திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் முதல் முதலில் நடிப்பதாக இருந்தது விஜய் சேதுபதி கிடையாதாம். மிர்ச்சி சிவாவை தான், இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க தேர்வுசெய்தாராம் விக்னேஷ் சிவன்.

அவரிடம் கதையை கூறியும், இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். இதனை ஒரு விருது வழங்கும் விழா மேடையில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement