• Sep 21 2024

அஜித்தை காப்பியடித்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்திய விக்னேஷ் சிவன்- கனெக்ட்-ஆன நயன் தாரா..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிம்பு மற்றும் வரலக்ஷ்மி நடிப்பில் வெளியான போடாபோடி என்னும் திரைப்படத்தில் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் தான் விக்னேஷ் சிவன். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நயன்தாராவையும் விஜய் சேதுபதியையும் வைத்து நானும் ரௌடி தான் என்னும் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு நயன்தாராவைக் காதலித்தும் வந்தார். அவர்களுக்கு இந்த ஆண்டு பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றதோடு வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண்குழந்தைகளையும் பெற்றுள்ளனர்.


மனைவிக்காக பல விசயங்களை செய்து வரும் விக்னேஷ் சிவன், அவரை வைத்து பல படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார். இதனைதொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தினையும் இயக்கவும் அதில் நயன் தாராவை கதாநாயகியாகவும் போடவுள்ளார்.


மேலும் அஜித் எப்போவாது ஒருமுறை தான் இணையத்தில் எதையாவது கூறுவதுண்டு.அப்படி துணிவு படத்திற்காக அட்டை விளம்பரம் செய்திருந்தார். அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவனும் பகிர்ந்திருந்தார். தற்போது மனைவி நயன் தாராவுக்கு பிரபல ஊடக பத்திரிக்கைக்கு அட்டை விளம்பரம் செய்திருக்கிறார்.


 நம்பிக்கையைக் கொடுக்கும் நயன் தாராவின் கனெக்ட் என்ற தலைப்பில் நயனின் க்யூட் புகைப்படத்தோடு இருந்துள்ளது அந்த போஸ்டர். வரும் டிசம்பர் 22 ஆம் தேதி கனெக்ட் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement