தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நானும் ரௌடி தான் என்னும் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் நடித்த நடிகை நயன்தாராவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வாடகைத் தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து தனது மனைவியுடன் இணைந்து கெரியரிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அதன்படி விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் அப்படம் இயக்குநர் மகிழ்திருமேனி கைவசம் போனது.அப் படம் டிராப் ஆன பட தகவலுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இதுவரை எந்த ஒரு புதிய பட அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் தான் கிரிக்கெட் உலகின் தல எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.ஒரு விளம்பரத்திற்காக விக்னேஷ் சிவன் தோனியை இயக்கி இருக்கிறாராம். தான் கடவுளாக கருதும் ஒருவரை இயக்கிய வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாது என நெகிழ்ச்சி உடன் கூறி உள்ளார்.
Listen News!