• Sep 21 2024

நயன்தாராவுக்காக புதிய முயற்சியில் இறங்கிய விக்னேஷ் சிவன்- அஜித் பட பிஸியிலும் இப்படி ஒரு பிளானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா நடித்த விளம்பரத்தினை விக்னேஷ் சிவன் தான் இயக்கியிருந்தாராம். இதனால் விக்னேஷ் இந்த வேலையையும் ஆரம்பித்து விட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருவதைக் காணலாம்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் அண்மையில் தான் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.


பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றதோடு பிரபலங்கள் பலரும் இத்திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சில மாதங்களாக இவர்களது திருமணம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

மேலும் அண்மையில் இருவரும் தாய்லாந்து, அதன் பின் ஐரோப்பிய நாடுகள் என இரண்டு முறை ஹனிமூன் கொண்டாட சென்று வந்துள்ளனர்.


இந்த நிலையில் விக்கி தற்போது நயன்தாராவை வைத்து ஒரு டிவி விளம்பரத்தை இயக்கி இருக்கிறார். ஒரு பிரபல பிராண்டின் விளம்பரத்தில் நயன் நடித்திருந்தார்.அதனை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். அதை போட்டோ எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டு உள்ள விக்னேஷ் சிவன் 'இதுதான் என் முதல் டிவி விளம்பரம்' என தெரிவித்து இருக்கிறார்.

அஜித் படத்தை இயக்கும் பணிகள் ஒருபக்கம் இருக்க நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் டிவி விளம்பரத்தை கூட இயக்கும் அளவுக்கு சென்றுவிட்டாரே என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும் நயன்தாரா ஜவான் படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement