• Nov 14 2024

அஜித்திடம் தேவையில்லாமல் அடம்பிடித்த விக்னேஷ் சிவன்- Ak62 பட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு நயன்தாரா தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் திரைப்படம் வெளியானது. இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார். 

இந்த நிலையில் அஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தினை கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருபதாகவும் கூறப்பட்டது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதுவும் படத்தில் நடிக்கும் நடிகர்களை தேடும் பணியில் படக்குழு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.


இப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ் நடிக்க இருப்பதாகவும், வில்லனாக அரவிந்த சாமி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

இப்படி AK62 படத்தை பற்றி பல தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில் இப்படத்தின் கதை அஜித்திற்கும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் லைகா AK62வில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. மேலும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்டது. 


 தற்போது ஒரு புதிய தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. AK62வில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்காக காரணம் நயன்தாரா என்று கூறப்படுகிறது.அதாவது AK62 படத்தின் இயக்குநராக இருந்த விக்னேஷ் சிவன் படத்தின் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் நயன்தாராவிற்கு பதிலாக நடிகை திரிஷாவை லைகா நயன்தாராவிற்கு பரிந்துரை செய்திருக்கிறது.

 அதனை விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், காஜல் அகர்வால் என தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளை பரிந்துரை செய்தும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவி நயன்தாராவை கதாநாயகியாக அடம்பிடித்திருக்கிறார்.


இந்நிலையில் இறுதியாக பிரபல பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்து சம்பளம் விவகாரம் வரையில் சென்ற பிறகு விக்னேஷ் சிவன் அந்த நடிகையும் வேண்டாம் என்று சொல்ல AK62 நடிகையும் நிறுவனம் மற்றும் அஜித் கடுப்பாகி விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கியதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்த தகவல் வைரலாக நிலையில் ஏற்கனவே விக்னேஷ் சிவனை கலாய்த்த நெட்டிசன்கள் தற்போது பலவிதமான மீம்ஸுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement