கடந்த 2012ம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் விக்னேஷ் சிவன்.அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அடுத்ததாக அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக உருவெடுத்தார் விக்னேஷ் சிவன். அதைத்தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கிய அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற வெற்றி படத்தை இயக்கி வெற்றிப்பாதைக்கு திரும்பினார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தின் AK62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.கடந்தாண்டு மார்ச் மாதம் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அதிகாரபூர்வமாக லைக்கா நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது படப்பிடிப்பு துவங்குவதற்கு ஒரு மாதம் இருக்கையில் விக்னேஷ் சிவனின் கதையில் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் உடன்பாடு இல்லாத காரணத்தால் AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கினார்.
என்னதான் இதைப்பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் AK62 வாய்ப்பு விக்னேஷ் சிவனை விட்டு நழுவியது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக நானும் ரவுடி தான் படத்தை போல ஒரு காமெடி கதையை எழுதி வருகிறாராம். அப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே தீருவேன் என்ற முனைப்பில் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!