ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து ஒரு படமும், தளபதி விஜய்யை வைத்து ஒரு படமும் கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மற்றும் சூர்யாவிடமும் இதுகுறித்து கமல் பேசியுள்ளார். அதற்கு அவர்கள் இருவருமே ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கமலின் ராஜ்கமல் நிறுவனம் வரும் நாட்களில் பல சர்ப்ரைஸ் அறிவிப்புக்களை வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Listen News!