• Nov 19 2024

விஜய் அண்ணா இப்படி பண்ணிடாரே! என வருத்தப்பட்டால் அதுக்கு நானே முழு பொறுப்பு. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒபன் டாக்

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர்  படத்தின் ட்ரெய்லர் வெளியானது.


ட்ரெய்லர் வெளிவந்ததும் இப்படத்தில் தளபதி கெட்ட வார்த்தை பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் விஜய் பெண்களை இப்படி இழிவாக சொல்லலாமா என்று பலரும் தமது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு லோகேஷ் கனகராஜ் எல்லாம் தகுதியே இல்லாத இயக்குனர் என்று  ஒருசிலர் விமர்சிக்கவும் செய்தனர். ஏற்கனவே நா ரெடிதான் பாடல் சர்ச்சையை சந்தித்த சூழலில் தற்போது ட்ரெய்லரும் சந்தித்திருக்கிறது.


இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தளபதி அண்ணா என்னிடம் வந்து கேட்டாரு இந்த வார்த்தை ஒகேவா இதை நான் சொல்லலாமா என?  நான் அவரை ரெம்பவே போஸ்பண்ணி  அண்ணா நீங்கள் இந்த வார்த்தையை கட்டயாம் சொல்லவேண்டும், அதுதான் கதைக்கு கண்டிப்பாகதேவை என சொன்னேன். விஜய் அண்ணா இப்படி பண்ணிடாரே என வருத்தப்பட்டால் அதுக்கு நானே முழு பொறுப்பு நானே .என கூறியிருக்கின்றார்.

Advertisement

Advertisement