• Nov 10 2024

விஜய் ஆண்டனி ரொம்ப கஷ்டப்படுறாரு... மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பிக்பாஸ் விக்ரமன் சொன்ன மனதை உருக்கும் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா நேற்றய தினம் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ஆண்டனி மகள் மீராவின் பூதவுடல் அஞ்சலிக்காக நேரில் சென்றிருந்த பிக்பாஸ் விக்ரமன் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ஒன்றினையும் வழங்கியுள்ளார். 


அந்தவகையில் அவர் கூறுகையில் "ரொம்பவும் கஷ்டமாக இருக்கு , ஆண்டனி ரொம்ப உடைஞ்சி போய் இருக்காரு, யாருமே எதிர்பார்க்கல பதினாறு வயசுல இப்படி ஒரு முடிவு என்று , எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு இசைக் கலைஞர்"எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் "என்ன சொல்லுறது என்றே தெரியல்ல. அவர் மகளை இழந்து ரொம்பவே கஷ்ட்டப்படுறாரு. யாரும் இப்படியான ஒரு முடிவு எடுக்க கூடாது என கேட்டுகொள்கிறேன். பிரச்சினைக்கு தற்கொலை தீர்வாகாது. இது ஒரு பெரிய இழப்பு அவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் எனது  ஆழ்ந்த இரங்கல்" எனவும் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "இது போன்ற பிரச்சினைகளுக்கு மனதளவில் தீர்வுகளை பெற நிறைய நிறுவனங்கள் இருக்கு. இந்தமாதிரியான எண்ணம் உள்ளவர்கள் அதனுடன் தொடர்ப்பு கொள்ளுங்கள்" என்றும் கூறியுள்ளார் பிக்பாஸ் விக்ரமன்.

Advertisement

Advertisement