Infiniti Film Ventures மற்றும் Lotus Pictures இணைந்து தயாரித்து பாலாஜி கே. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கொலை. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களம் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது.
படத்தின் First லுக் முதல் டிரைலர் வரை அனைத்து விஷயங்களும் ரசிகர்களை கவர்ந்தது. அதே போல் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்க்கவும் ஆவலுடன் காத்திருந்தனர். இப்படி பல எதிர்பார்ப்பை கொண்டிருந்த கொலை ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
மிகவும் பிரபலமான மாடலாக இருக்கும் லைலா {மீனாட்சி சௌத்ரி} தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இந்த கேஸ் காவல்துறை அதிகாரியான ரித்திகா சிங்கிடம் செல்கிறது. ஒரு வாரத்திற்குள் இந்த கேஸை முடிக்க வேண்டும் என மேலதிகாரிகளால் கெடு கொடுக்கப்படுகிறது.
இந்த சமயத்தில் விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார் ரித்திகா. ஆனால், முதலில் இந்த கேஸை எடுத்துக்கொள்ள மாட்டேன் என கூறும் விஜய் ஆண்டனி பின், சில காரணங்களால் முழு மூச்சுடன் இந்த கேஸை ரித்திகாவுடன் இணைந்து விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
விஜய் ஆண்டனி விசாரணையில் யார் யாரெல்லாம் சிக்கினார்கள், கொலையாளியை கண்டு பிடித்தாரா விஜய் ஆண்டனி, ஏன்? எதற்காக லைலா கொலை செய்யப்பட்டார் என்பதே படத்தின் மீதி கதை ஆகும்.
கதாநாயகன் விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், அவருடைய நடிப்பு பெரிதும் கவரவில்லை. ரித்திகா சிங் நடிப்பு ஓரளவு பரவாயில்லை. அறிமுக நாயகி மீனாட்சி சௌத்ரியின் நடிப்பு ஓகே.
ராதிகா சரத்குமார் எதற்காக இப்படத்தில் நடித்துள்ளார் என தெரியவில்லை. எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அனைவரையும் தாண்டி தனது நடிப்பில் மிரட்டும் ராதிகாவிற்கு இப்படத்தில் சுத்தமாக ஸ்கோப் இல்லை. முரளி ஷர்மா தனக்கு கொடுத்ததை செய்துள்ளார். மற்றபடி நடிப்பில் யாரும் ஸ்கோர் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்.
Listen News!