• Nov 17 2024

இறந்த மகளைப் பார்ப்பதற்காக அடிக்கடி மீரா சமாதிக்குச் செல்லும் விஜய் ஆண்டனி... கண் கலங்க வைத்த சம்பவம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் ஆவார். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். 


மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மூத்த மகள் மீரா சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இவரின் இறுதிக் கிரியைகளும் குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளன.


இருப்பினும் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் குடும்பத்தினர் இன்றுவரை மீளாத் துயரில் இருந்து வருகின்றனர். பலரும் தொடர்ந்து விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலினைத் தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றனர்.


இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது மகள் மீராவின் சமாதிக்கு அடிக்கடி சென்று வருவதாக ஒரு தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை தொடருமானால் அவரின் மனநலம் பாதிக்கப்பட்டு விடும் என்பதற்காக பலரும் அவரின் மனதை மாற்ற முயற்சித்து வருகின்றனர். அத்தோடு சமீபத்தில் விஜய் ஆண்டனி மறுபடியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement