• Nov 10 2024

வலியோடு வாழப் பழகி விட்டேன்... மகளின் இறப்பைத் தொடர்ந்து முதன் முறையாக மன வேதனையுடன் பேசிய விஜய் ஆண்டனி.. என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தபடமான ரத்தம் அக்டோபர் மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு ரத்தம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது இரண்டாவது மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். 


மூத்த மகள் மீரா இறந்து ஒரே வாரத்தில் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து படம் சம்பந்தப்பட்ட விடயங்களை மேற்கொண்டு வருவதற்காக பலரும் விஜய் ஆண்டனிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி பேசுகையில் சுமார் 10 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தின் நடிப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தனது மகளின் இழப்பு குறித்தும் பேசியுள்ளார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் "நான் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். அப்போதிருந்து இப்போதுவரை அடுத்தவர்களை மகிழ்விப்பது ஒன்று தான் என்னுடைய நோக்கம். நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போனது போல் மாறிவிட்டேன்" எனவும் மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். 


மேலும் "ஒரு அப்பாவாக தங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு, ஆனால் அனைத்திற்கும் வாழ்க்கையில் அனுபவம் தேவை. வாழ்க்கையின் எல்லா திசைகளையும் நான் பார்த்து விட்டேன். வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மறக்க வேண்டிய அவசியமில்லை மறக்க யோசிக்க வேண்டாம் நம் வாழ்க்கையே ஞாபகம் தான் நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன் வலி ஏற்பட்டால் கூட அந்த வலியோடு வாழ நினைப்பேன்" எனவும் மகளின் இறப்பைத் தொடர்ந்து மிகவும் மன வேதனையில் பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.

Advertisement

Advertisement