இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுடைய மகள் மீராவின் உடல் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் இறந்ததை உறுதிபடுத்திய பின்பு தற்போது வைத்தியசாலையில் இருந்து டீடீ சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் தற்கொலை செய்து கொண்ட அறையை தடைவியல் நிபுணர்கள் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான பணிகளும் நடைபெற்றது. அவரின் உடல் உறவினர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விஜய் ஆண்டனியின் வீட்டின் பாதுகாப்புக்காக நிறைய போலீசார் நியமித்துள்ளனர். இன்று மாலை வரை விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் அவரின் இல்லத்தில் வைக்கப்படஉள்ளது. அத்தோடு அவரின் உறவினர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தவண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் நடிகர் விஜய் அவர்களும் அஞ்சலி செலுத்த வருவதாக தகவல்கள் தெரியவருகிறது. இதனைக் கேள்விப்பட்டதும் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அநேகமானோர் விஜய் ஆண்டனியின் வீட்டை சூழந்தவண்ணம் உள்ளனர்.
Listen News!