• Nov 19 2024

மீராவின் உடல் நல்லடக்கம்... கண்ணீருடன் வழியனுப்பி வைத்த விஜய் ஆண்டனி குடும்பம்.. கண்கலங்க வைத்த இறுதி ஊர்வல புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இன்று  கீழ்ப்பாக்கம் கல்லறைதோட்டத்தில் அவரின் உடல்   நல்லடக்கம் செய்யப்பட்டது.


அந்தவகையில் இவரின் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்று நல்லடக்கத்துக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரின் இறுதி கிரியைகளில்  உறவினர்கள், நண்பர்கள், பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அநேகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.


அதுமட்டுமல்லாது விஜய் ஆண்டனி மகள் மீராவின் கடைசி புகலிடமான கல்லறையை கண்டதும் விஜய் ஆண்டனி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். அவரின் இழப்பு எதிர்பார்க்காத ஒன்று, அதனால் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டாலும், அந்த வலியை குடும்பத்தினரால் என்றுமே மறக்க முடியாது. 


Advertisement

Advertisement