• Sep 21 2024

இப்படி ஏமாத்திட்டீங்களே... 'பிச்சைக்காரன்-2' படத்தால் புலம்பும் விஜய் ஆண்டனி ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'பிச்சைக்காரன்'. அதாவது இப்படத்தின் மூலமாக தாயை காப்பாற்ற பணக்கார மகன் பிச்சைக்காரனாக மாறிய கதையை அழகாக சொல்லி இருந்தார் சசி. 

பிச்சைக்காரன் படத்தின் உடைய பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், தற்போது அதன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை சசிக்கு பதிலாக விஜய் ஆண்டனியே இயக்கி நடித்து உள்ளார்.

 

மேலும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் அமெரிக்காவில்(USA Premiere) இந்தியாவில் வெளியாவதற்கு முன்னரே வெளியாகிவிட்டது. அந்தவகையில் பிச்சைக்காரன்-2' படத்திற்கு USA ப்ரீமியர் ஷோவிலிருந்தும் நெகடிவ் கருத்துக்கள் தான் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு ரசிகர்களும் புலம்பி வருகின்றனர். அதாவது பிச்சைக்காரன்-2 மோசமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கலக்கி இருந்தாலும், படத்தில் புதிதாக எந்தவொரு அம்சங்களும் இல்லை. எப்போதும் போல ட்ராமாதான் இப்படத்திலும் நிறைந்துள்ளது. 


இவர்கள் கதை சொல்லும் விதத்தில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் இந்தப் படத்தை ஒருமுறை மட்டும் தான் பார்க்கலாம் என்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றிருக்கின்றன.

அத்தோடு பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் போல அதன் இரண்டாம் பாகம் இல்லை எனவும் கூறப்படுகின்றது. அதாவது ஜென்டில் மேன் படம் போல பிச்சைக்காரன் 2 படமும் சமூக கருத்தினைத்தான் கூறுகிறது. இருப்பினும் முதல் படத்தில் இருந்த உணர்வு ரீதியான அம்சங்கள் இதில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

எனவே பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தை போல் 2-ஆம் பாகமும் அமோகமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது.

Advertisement

Advertisement