விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த பீஸ்ட் படத்தின் பாடல் செய்த சாதனை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அரபிக்குத்து பாடல் வெளியாகி ஏராளமான சிறுவர் தொடக்கம் இளசுகள் வரை கவர்ந்து ஏகோபோகமான வரவேற்பை பெற்றிருந்தது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் வேட்டை நடத்தியது.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் வாரிசு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்த மாதத்தில் அவரது நடிப்பில் லியோ படம் வெளியாகவுள்ளது .
இந்நிலையில் யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்துவந்த இந்த பாடல் தற்போது 500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை செய்துள்ளது. இதையொட்டி தற்போது புதிய பாடல் வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பாடல் 500 மில்லியன் வீயூஸ்களை கடந்துள்ளதும் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் லியோ படத்தின் முதல் பாடல் நா ரெடிதான் வெளியாகி மாஸ் காட்டி வரும் நிலையில், தற்போது அவரது முந்தைய படத்தின் பாடலும் ட்ரெண்டாகியுள்ளது.விஜய் ரசிகர்களை குதுகலிக்க வைத்துள்ளது.
Listen News!