• Sep 20 2024

தன்னுடைய அம்மாவை சைக்கிளில் ஏற்றிச் சென்ற விஜய்- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ-

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அரசியலில் நுழைய உள்ளது தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அவர் எப்போது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர் அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், அதற்கான பணிகளை சைலண்டாக செய்துகொண்டு தான் இருக்கிறார். 

இது தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் .முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள வெங்கட் பிரபு, அஜித்து மங்காத்தா ஹிட் கொடுத்ததைப் போல தளபதி 68-ஐ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தளபதி 68 ப்ரீ புரொடக்‌ஷனில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு, விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறாராம்.இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களும்மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


அந்த வகையில் தற்பொழுது விஜய்யின் பழைய போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் தன்னுடைய சிறுவயதில் அம்மா சோபனாவை தனது சைக்கிளில் ஏற்றி வைத்துக் கொண்டிருக்கின்றார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement