தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நடிகர் விஜய் தற்போது கட்சியின் பெயரில் உள்ள எழுத்துப்பிழையை திருத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார் என்பதும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி உள்பட பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.
மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மட்டுமே போட்டி என்றும் தெரிவித்திருந்தார். எனவே அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் கட்சியை வளர்ப்பது, கட்சிக்கு தொண்டர்களை சேர்ப்பது மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பது ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் வெற்றி அருகே ‘க்’ என்ற எழுத்து வரவேண்டும் என்று சிலர் சுட்டிக் காட்டிய நிலையில் தற்போது அதை சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து விஜய்யின் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்று மாற உள்ளதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறிய போது நியாயமான விமர்சனங்களை ஏற்பது தான் தலைமைக்கு அழகு என்ற கொள்கையின் அடிப்படையில் கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
Listen News!