• Sep 20 2024

அண்ணாத்த பட இயக்குநரை சந்தித்த விஜய்-தளபதி 68 வது படம் பற்றி வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முக்கிய நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தனது 66 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பானது சென்னையில் நடிடைபெற்று வருகின்றது. இவருடன் இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து விஜய் 68 படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குவதாக கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம்,வேதாளம் என பல ஹிட்படங்களை இயக்கி ரசிகர்களை குஷுப்படுத்தினார்.

இவர் இயக்கத்தில் இறுதியாக அண்ணாத்த படம் கடந்தாண்டு வெளியானது. இந்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜய், சிவா சந்திப்பு நடந்ததாகவும்,தனக்கு ஒரு கதை தயார் செய்யச் சொல்லி விஜய் கூறியதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement