இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிப்பில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லைகர்.இப்படமானது ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது.
இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் பல கோடிக் கணக்கில் நஷ்டமடையக் கூடும் என சொல்லப்படுகிறது.
இந்த தோல்வியால் லைகர் கூட்டணியான விஜய் தேவரகொண்டா- பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாக இருந்த JGM என்ற படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
Listen News!