• Sep 20 2024

முத்தம் கொடுத்து கொண்ட மாணவிகள்.. விஜய் தேவரகொண்டாவின் ரியாக்சன்.. வைரல் வீடியோ..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

இரண்டு மாணவிகள் முத்தம் கொடுத்த கொண்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்து விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தால்தான் நாங்கள் தேர்வுக்கு படிப்போம் என்று அதில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பாக பெண் ரசிகைகள் அவருக்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தான் விஜய் தேவரகொண்டாவின் திரைப்படங்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகைகளான இரண்டு மாணவிகள் தங்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒருவர் முத்தம் கொடுத்து கொண்டு ’விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தால்தான் நாங்கள் தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்போம்’ என்றும் பதிவு செய்துள்ளனர். 



இதனை அடுத்த விஜய் தேவரகொண்டா அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளதோடு ’தேர்வில் ஒழுங்காக படித்து 90% மதிப்பெண்கள் எடுத்தால் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மகிழ்ச்சி அடைந்த அந்த மாணவிகள் தற்போது தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருவதாகவும் விஜய் தேவரகொண்டாவை சந்திக்க போகிறோம் என்பது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தி கமெண்ட் பதிவு செய்த விஜய் தேவரகொண்டாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement