தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் மைக் டைசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு லைகர் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். அதுபோல படத்தின் டிரைலரும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக நடிகர் ஆர் கே சுரேஷ் பெற்றுள்ளார்.
எனினும் சமீபத்தில் இவர் மாமனிதன் திரைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சரவணன் அருள் நடித்த தி லெஜெண்ட் படத்தின் திரைவிமர்சனம்
- அந்த கேள்வி கேட்ட நபர்- நச் என பதிலளித்த சீரியல் நடிகை நந்தினி..!
- தனுஷை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட அறந்தாங்கி நிஷா…!
- விக்கியின் அம்மா மற்றும் தங்கையை பார்த்துள்ளீர்களா..? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!
- இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!