விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா மூலம் அறிமுகமானார்.
ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார். மேலும் விஜய் 2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் தெலுங்கு சினிமா வின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் அர்ஜுன் ரெட்டிஇல் அவரது நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றது.
மேலும் தமிழ் மக்களிடம் அவர் பிரபலம் என்றாலும் தமிழில் நோட்டா தான் அவரது முதல் திரைப்படம். இந்நிலையில் குழந்தைகள் மருத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார்.
அதில் அவர் பேசும்போது, பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசின் உதவியாலும் பொதுமக்கள் நன்கொடையாலும் நடப்பதை அறிந்தேன். மனிதாபிமான அடிப்படையில் பலர் உறுப்புதானம் செய்கிறார்கள். பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் அதிகம் தேவைப்படுகிறது.
ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. உடல் உறுப்புகளை வீணாக்க கூடாது. நான் எனது அனைத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளிக்கிறேன்" என்றார். அவரை வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
Listen News!