• Sep 20 2024

லைகர் பட தோல்வியால் விஜய் தேவரகொண்டா எடுத்த திடீர் முடிவு-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் தான் நடிக்கும் படங்கள் மூலம் வெற்றிகண்டவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா.இவர் ஹிந்தி debut என விளம்பரப்படுத்தப்பட்ட லைகர் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸான நிலையில் பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூலிக்கவில்லை.

இப் படம் படுதோல்வி அடைந்த நிலையில் அதற்க்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என கடுமையாக  விமர்சிக்கப்பட்டது. படத்தை புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆவது பற்றி எனக்கு கவலையில்லை என அவர் தெரிவித்து இருந்தார்.



லைகர் படுதோல்வியில் முடிந்திருக்கும் நிலையில் தனது சம்பளத்திலிருந்து 6 கோடி ரூபாயை விஜய் தேவரகொண்டா திருப்பி கொடுத்து இருக்கிறார். 

மேலும் அவர் சுமார் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக முன்பு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.



 அதே இயக்குநர் உடன் விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்கும் ஜன கன மன படமும் சிக்கலில் மாட்டி இருக்கிறது. அந்த படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் விஜய் தேவரைக்கொண்டா அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கிறாராம். 




இப் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றால் அதில் ஷேர் பெற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது. 


Advertisement

Advertisement