நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்க்கு நண்பர்கள் வட்டாரம் மிக குறைவு தான். தனது கல்லூரி கால நண்பர்கள் உடன் தான் அவர் நட்புடன் இருந்து வருகிறார்.
விஜய்யின் நண்பராக நீண்ட காலம் இருந்து வரும் நடிகர் சஞ்சீவ் உடன் விஜய் இதற்கு முன் ஒருமுறை சண்டை போட்டு பேசாமல் 6 மாதம் வரை இருந்துள்ளாராம் என தகவல் வெளியாகி உள்ளது.
டிவி சேனல் ஒன்றில் விஜய்யின் நண்பர்கள் எல்லோரும் பங்கேற்ற ஒரு ஷோ நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ் மட்டும் கலந்துகொள்ளவில்லையாம். அவர் திருமதி செல்வன் ஷூட்டிங்கில் இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என கூறிவிட்டாராம்.இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டு விஜய் சஞ்சீவிடம் ஆறு மாசத்திற்கு பேசவே இல்லையாம் என கூறப்படுகிறது.
Listen News!