• Sep 20 2024

ஜெயிலர் பட தயாரிப்பாளர் கலாநிதி மாறனைத் திட்டித் தீர்த்த விஜய் ரசிகர்கள்- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள்  தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனை கலாய்த்து வருகின்றனர். காரணம் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தையும் கலாநிதி மாறன் தான் தயாரித்திருந்தார். ஆனால் அப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தாமல் விஜய்யையும் இயக்குநர் நெல்சனையும் வைத்து சன் டிவியில் நேருக்கு நேர் என ஒரே ஒரு பேட்டி வீடியோவை மட்டுமே நடத்தியிருந்தார். 


ஆனால், ஜெயிலர் படத்திற்கு மட்டும் பிரமாண்டமாக இசை வெளியீடு நடத்தியுள்ளனரே எனத் திட்டி வருகின்றார்கள்.இதனால் கலாநிதி மாறன் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இந்தியாவிலேயே ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். சிலர், சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ரஜினிக்கு இப்போ 72 வயசாகுது, அந்த வயதில் அவரைப் போல வேகமாக நடக்க முடியுமா, நடிக்க முடியுமா, உங்களை நம்பி ஒரு பெரிய தயாரிப்பாளர் படத்தை கொடுப்பாரா? அப்படி செய்தால், அப்போ ஆசைப்படுங்க என்று கூறியுள்ளார்

இதனால் ஜெயிலர் ஆடியோ லாஞ்சுக்கு சென்று என்ன தான் நடக்குது என போய் பார்த்த விஜய் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் இருந்து பயங்கர கடுப்பாக வெளியே வந்த விஜய் ரசிகரிடம் யூடியூப் சேனல் ஒன்று மைக்கை நீட்ட அவன் மட்டும் தனியா என் கையில கிடைச்சா அவ்ளோ தான் என்றும் தளபதி பத்தி தப்பான் பேசுறான், தளபதி அரசியலுக்கு வரமாட்டாராம் என கலாநிதி மாறனை கெட்ட வார்த்தைகளால் திட்டி விஜய் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.


மேலும், சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்தையும் கலாநிதி மாறனையும் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement