• Sep 20 2024

பிறந்தநாளில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்...அடடே ஒரே கல்லில் இரண்டு மாங்காயா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து 'லியோ' படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், கதிர், பாபு ஆண்டனி, சாண்டி, மனோபாலா, மன்சூர் அலிகான் எனப் பலரும் நடிக்கின்றனர்.


அத்தோடு இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத்தான் இசையமைக்கிறார். இப்படத்தினுடைய படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. அத்தோடு 'தளபதி 68' குறித்த அப்டேட்டுகளும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சப்பிரஸ் விடயங்கள் காத்திருக்கின்றன. அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகவுள்ளதாகவும், இந்த வீடியோவிற்கு கமல் ஹாசன் வாய்ஸ் ஓவர் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


அதேபோன்று ஜூன் 22-ஆம் தேதி தளபதி 68 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Advertisement