நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், மீண்டும் காஷ்மீரில் பேட்ச் வேலைகள் நடத்தப்பட்டன.
படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 5ம் தேதி நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மலேசியா, சென்னை அல்லது மதுரையில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசுக்கு பின்பு பூஜையுடன் துவங்கவுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில், ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் என அவருக்கு இரண்டு நாயகிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தில் பிரபுதேவா, ஜெய் உள்ளிட்டவர்களும் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!