• Sep 21 2024

விஜய் மருத்துவமனையிலா..? வெளியான வீடியோ...குழப்பத்திற்குள்ளான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகன் என்றால் அது நம்ம விஜய் தான். பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் இவர் தளபதி என ரசிகர்களால் சிறப்பாக அழைக்கப்படுகின்றார். இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கும் என்றே ஏராளமான ரசிகர் கூட்டம் இவருக்கு உருவாகி இருக்கின்றது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் இவருக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகி இருக்கின்றன.


தனது தந்தையின் இயக்கத்தில் அமைந்த 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த இவர் இன்று 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த படம் 'பீஸ்ட்'. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.



விஜய் நடிப்பில் உருவாகி இருந்த ஏனைய படங்களை விட இப்படமானது பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படத்தின் உடைய ஷூட்டிங் ஆரம்பமான நிலையில் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். மேலும் இவர்களுடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் இப்படம் தொடர்பாக சமீபத்தில் வெளியாகி இருந்த ஒரு வீடியோ ஆனது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கின்றது. அதாவது படக்குழு மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் படி அப்படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்றே இணையத்தில் கசிந்துள்ளது. இதில் மருத்துவமனையில் விஜய், சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் முக்கிய காட்சியில் நடிக்கும் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.




அதனை மிகவும் அருகில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் "விஜய்க்கு எதுவும் ஆகிடிச்சா, அவர் மருத்துவமனையிலா" என்ற குழப்பத்துக்கு ஆளாகியிருந்தனர். எனினும் அது ஷூட்டிங் வீடியோ என பின்னர் தெரிய வந்துள்ளது.  அதுமட்டுமல்லாது இவ் விடியோவானது இணையத்தில் செம வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement