• Nov 19 2024

விஜய் பெண்ணாகப் பிறந்திருந்தால் கண்டிப்பாக நான் காதலித்திருப்பேன்... கூறிய பிரபல நடிகர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். 'தளபதி' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற இவர் தனது தந்தையின் இயக்கத்தில் உருவான 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.


சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்து தன்னுடைய சாதனையை நிலை நாட்டியுள்ள இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இவரோடு இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படப்பிடிப்புகள் யாவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.


மேலும் 'வாரிசு' படம் முடிந்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' இல் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பில் படையை கிளப்பி வருகின்ற விஜய் நிஜத்தில் அமைதியான சுபாவம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் சாதாரண ஒரு மனிதனைப் போல நடந்து கொள்கின்ற இவரின் குணவியல்பு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 


நடிகர் விஜய் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் பல விதமாக புகழ்ந்து பேசி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகரான Telephone ராஜ் என்பவர் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் "விஜய்யை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் நான் பெண்ணாக பிறந்திருந்தால் கண்டிப்பாக விஜய்யை காதலித்திருப்பேன்" என்றும் கூறியுள்ளார்.


இந்த விஷயமானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement