விஜய் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் உருவாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் கடந்த மாதம் இவரின் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் வெளியானது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியாகி முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. பின்னர் குடும்ப ரசிகர்கள் பலரதும் ஆதரவோடு வசூலில் பட்டையை கிளப்பியது.
வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இதனையடுத்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் தான் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மற்றோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் தான் விஜய் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று இதுவரை தெரியவில்லை. இதனால் விஜய் அடுத்தாக யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!