• Nov 17 2024

அதிக சம்பளம் பெறும் நடிகர் விஜய்! இவரின் சொத்து மதிப்பு எவ்ளவு தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி  நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தந்தை இயக்கிய வெற்றி படத்தில் ஆரம்பித்து தற்போது தளபதி 68 வரைக்கும் வெற்றியுடன் நடைப்போட்டுக்குக் கொண்டிருக்கிறார் விஜய்.


மேலும், தற்போது விஜய் பற்றிய பல தகவல்கள் அதிகம் வைரலாகி வந்துக் கொண்டிருக்கின்றது. அதிலும் இவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அனைவரும் சொல்லி வந்த நிலையில் தற்போது அதற்கு அஸ்திவாரம் இடும் வகையில் பல வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவில் விஜய் தான் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார்.இவர் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார், ஆனால் தற்போது தளபதி 68 படத்திற்கு 200 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் விளம்பரங்கள் மூலம் 10 கோடிக்கு மேல்  சம்பளம் வருகிறதாம். மேலும், இவர் பேரில் பல திருமண மண்டபங்களும் இருக்கிறது அவற்றை வாடகைக்கும் விட்டிருக்கிக்கிறாராம் இதனால்  விஜய்யின் சொத்து மதிப்பு 56 மில்லியனாக இருக்கின்றது. இது, இந்திய மதிப்பில் 445 கோடி என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement