• Nov 19 2024

தனது தந்தையின் கன்னத்தில் முத்தமிட்ட விஜய்- மறக்கமுயாத நாள் என்று பதிவிட்ட எஸ்.ஏ. சந்திரசேகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் ஓர் புதிய படத்தில் நடித்து வருகின்றார். மேலும் தளபதி விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே கடந்த வருடம் அரசியல் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்பின், தனது தந்தை குறித்து பேசாமல் இருந்த விஜய் பீஸ்ட் படத்திற்காக கொடுத்த பேட்டியில், தந்தை குறித்தும் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்தும் பேசியிருந்தார்.

இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டது என்று எப்போது கூறுவார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது அப்பா சந்திரசேகருக்கு சிறு வயதில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் விஜய்யுடன் அவரது தங்கை வித்யாவும் இருக்கிறார். இதனை சந்திரசேகர் தனது மகளின் நினைவு நாளான இன்று தனது சமூக வலைத்தளத்தில் 'மறக்க முடியாத நாள்' என்று கூறி பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement