தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, விஜய் சாரை ரசிச்சுகிட்டே இருக்கலாம் என்றும், அவரை பார்க்கும் போது வரும் சந்தோசம் அது தான் ஸ்டார் குவாலிட்டி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடைசியாக, நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் . மிகந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகிய இப்படம் மோசமான விமர்சனங்களையே சந்தித்தது.
ஆனால் படம் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்த வருகின்றார்.இப்படம் பமிலி ராமா கதையாக இருக்கும் என்று எண்ணப்பட்டு வந்தது.
ஆனால் இது பமிலி ராமா கதை மட்டுமல்ல என நடிகர் சரத்குமார் பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனால் இப்படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் Vintage பாடல்கள் தொடர்பான டுவிட்டர் பதிவு இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், அதற்கு பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கொடுத்துள்ள ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
In love with this thread ❤️
Alwys my go to vintage Vijay sir songs list is here, pls add “oodha oodha oodha poo” also if you can 👍
Muthu muthanaaa padalgal, Vijay sir ah rasichikite irukalam @actorvijay sir💪💪 avara paatha vara sandosham that’s the star quality https://t.co/InaMBzJIud
அந்த வகையில், டுவிட்டர்வாசி ஒருவர் விஜய்யின் Vintage பாடல்கள் தொடர்பான ஒரு பதிவை பகிர இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வந்தது. இதனை கவனித்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, டுவீட்டை பகிர்ந்து, விஜய் சாரை ரசிச்சுகிட்டே இருக்கலாம் என்றும், அவரை பார்க்கும் போது வரும் சந்தோசம் அது தான் ஸ்டார் குவாலிட்டி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'ஊதா ஊதா ஊதா பூ' பாடலை இணைக்கவும் அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!