• Nov 10 2024

திருமணமாகாத பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்... நம்ம தளபதியா இப்படி..? வெளியான புகைப்படத்தால் குழப்பத்திற்கு உள்ளான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருந்து வரும் நடிகர் என்றால் அது நம்ம விஜய் தான். காலத்திற்கு காலம் அவரது சம்பளத் தொகையும் உயர்ந்த வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் அவரது சம்பளம் நூறு கோடியை தாண்டிவிட்டது. 


இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும் குறிப்பிடத்தக்களவு வசூலினைப் பெறத் தவறுவதில்லை. என்ன நடந்தாலும் படத்திற்கு படம் வெற்றி தோல்வி என அனைத்தையும் அவர் அனுபவப் பாடமாகவே எடுத்துகொண்டு பல விஷயங்களை செய்து வருகிறார்.


இதுவரை காலமும் அதிகளவில் மாஸ் ஹீரோ கதைகளில் நடித்து வந்த அவர் தற்போது குடும்பத்திற்கு முக்கியதுவம் தரும் வகையில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது.  


இந்நிலையில் விஜய்யின் முன்னைய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கின்றது. அதாவது அந்தப் புகைப்படத்தில் விஜய் நடிகை ஹன்சிகாவுடன் ரொம்ப நெருக்கமாக இணைந்து இருந்து புகைப்படம் எடுத்திருக்கின்றார்.


அந்தவகையில் விஜய் மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து இதுவரை இரு திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். அதாவது 'புலி' மற்றும் 'வேலாயுதம்' ஆகிய படங்களில் விஜய் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். 

இந்த நிலையில் இப்புகைப்படமும் அப்படங்களில் நடித்த காலத்தில் இருவரும் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. எனினும் விஜய்யை பற்றி ஒரு சின்ன விஷயம் கசிந்தாலும் அதனை பேசுபொருளாக மாற்றி விடுகின்ற ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தையும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement