• Nov 19 2024

குட்டிக் குழந்தையின் அழுகையை நிறுத்திய விஜய்... ரஞ்சிதமே டான்ஸ் பார்த்ததும் குழந்தை கொடுத்த ரியாக்ஷன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாகவே நடிகர் விஜய்யைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இவரின் நடிப்பிற்கும் சரி, நடனத்திற்கும் சரி, நகைச்சுவை கலந்த பேச்சிற்கும் சரி மயங்காதோர் இல்லை. சிறியோர் முதல் பெரியோர் வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


அந்தவகையில் பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வாரிசு படத்தின் பாடலை பார்த்து விட்டு விஜய் அங்கிளை பார்க்க வேண்டும் என அடம்பிடித்தது. இது குறித்த வீடியோ ஆனது சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து விஜய் வீடியோ காலில் அந்தக் குழந்தையுடன் பேசி இருந்தார்.


இந்நிலையில் தற்போது இன்னொரு குழந்தையின் மனதையும் விஜய் கவர்ந்திருக்கின்றார். அதாவது படுக்கையில் அழுது கொண்டிருந்த குட்டிக் குழந்தை போனில் ஓடிய வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் விஜய்யின் நடனத்தைப் பார்த்ததும் தன்னுடைய அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்கின்றது.


இது குறித்த வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement