• Sep 20 2024

வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கட்டாயம் வேண்டும்-வம்சியிடம் ரெக்கமன்ட் செய்த விஜய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்பொழுது தனது 66 படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு வாரிசு என்று என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விஜய்யின் பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் கதையும் பிரெஞ்சு படத்தின் காப்பி தான் என சொல்லப்பட்டு வருகிறது. குடும்ப, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருவதோடு தமன் இசையைமைக்கிறார்.

சென்னை, ஐதராபாத் என மாறி மாறி இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து வருகின்றது.இப்படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஆகஸ்ட் மாதத்தில் வாரிசு படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, பிரேக் எடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும்,கூறப்படுகின்றது. இப்படத்தில் ஏற்கனவே சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சங்கீதா கிருஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகரும், டைரக்டருமான எஸ்.ஜே.சூர்யாவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, மெர்சல் படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்தார். தற்போது மாநாடு,டான் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் வாரிசு படத்திலும் அவரை நடிக்க வைக்க டைரக்டர் வம்சியிடம் விஜய் தான் ரெக்கமன்ட் செய்தாராம். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை அவருக்கும் படித்திருந்ததால் வாரிசு படத்திலும் மிக முக்கிய கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க போகிறார்களாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement