தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் .இவரின் முதல் படம் ஜவான். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தான் நாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும் வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்கின்றனர். ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இப்படம் வருகின்ற ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஓரிரு மாதத்தில் முடிவடையும் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தாலும் தற்போது லியோ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை அதில் நடிக்க வைப்பதற்கு தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம் அட்லீ.
இறுதியாக அவருக்கு ஓகே சொல்லியிருப்பது புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தானாம். விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக மிரட்டிய சூர்யாவின் கேரக்டர் போல் ஜவானில் அல்லு அர்ஜுனுக்கு செம்ம மாஸான கேமியோ ரோலை கொடுத்துள்ளாராம் அட்லீ. விரைவில் அல்லு அர்ஜுன் ஜவான் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!